Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் பல வெளிநாட்டவர்களை நாட்டை வெளியேறுமாறு உத்தரவு கடிதம்.

சுவிட்சர்லாந்தில் பல வெளிநாட்டவர்களை நாட்டை வெளியேறுமாறு உத்தரவு கடிதம்.

சுவிட்சர்லாந்தில் பல வெளிநாட்டவர்களை நாட்டை வெளியேறுமாறு உத்தரவு கடிதம்.

சுவிட்சர்லாந்தில் வாழும் சில வெளிநாட்டவர்கள், தங்களின் குடியிருப்பு அனுமதி 2026 டிசம்பர் 31 முதல் தானாகவே ரத்து செய்யப்படும் என்றும் அதற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறிய போலியான கடிதங்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸ் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, இந்தக் கடிதங்கள் State Secretariat for Migration (SEM) சார்பில் அனுப்பப்பட்டதாக காட்டப்பட்டிருந்தன.

அந்தக் கடிதங்களில், ஜூன் 14 ஆம் தேதி நடைபெறவுள்ள குடியேற்ற கட்டுப்பாட்டு “No to 10 million” மக்கள் வாக்கெடுப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், SEM வெளியிட்ட விளக்கத்தில், இந்தக் கடிதங்கள் முற்றிலும் போலியானவை என்றும், பல ஆண்டுகளாக பல்வேறு வடிவங்களில் இத்தகைய தவறான தகவல்கள் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

N4a 2

மேலும், இந்தக் கடிதங்களுக்கு எந்த சட்டபூர்வ அடிப்படையும் இல்லை என்றும், அவற்றைப் பெற்றவர்களின் குடியிருப்பு அனுமதி நிலைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர்களின் உரிமைகள் தொடர்பான அரசியல் விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தவறான தகவல்கள் மற்றும் அச்சத்தை ஏற்படுத்தும் பிரசாரங்கள் அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

© KeystoneSDA

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button