Local Swiss News

லுசேர்னில் துப்பாக்கிச் சூடு சம்பவம் – பொதுமக்களிடம் மீண்டும் உதவி கோரும் போலீசார்

லுசேர்னில் துப்பாக்கிச் சூடு சம்பவம் – பொதுமக்களிடம் மீண்டும் உதவி கோரும் போலீசார்

லுசேர்னில் துப்பாக்கிச் சூடு சம்பவம் – பொதுமக்களிடம் மீண்டும் உதவி கோரும் போலீசார்

லுசேர்ன் (Luzern) நகரில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக Luzerner Polizei மீண்டும் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.

2026 மார்ச் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 2.20 மணியளவில், Baselstrasse பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவல் கிடைத்த உடனேயே பல அவசர மீட்பு மற்றும் போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன. அங்கு காயமடைந்த நிலையில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

N2a 1

சம்பவத்துக்குப் பின்னர், குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் வெள்ளை நிற விநியோக வாகனம் ஒன்றில் நகரத்திற்கு வெளியே செல்லும் திசையில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர், சந்தேகிக்கப்படும் அந்த வாகனம் Littau நகரப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இதனால், சம்பவத்தை பார்த்தவர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான தகவல்கள் தெரிந்தவர்கள் முன்வருமாறு லுசேர்ன் கன்டோனல் போலீசார் மீண்டும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

© Kapo LU

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button