G7 உச்சி மாநாட்டை எதிர்த்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி
G7 உச்சி மாநாட்டை எதிர்த்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி

G7 உச்சி மாநாட்டை எதிர்த்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி
பிரான்ஸின் எவியான் (Evian) நகரில் ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறவுள்ள G7 உச்சி மாநாட்டை எதிர்த்து, ஜெனீவாவில் ஆர்ப்பாட்ட பேரணி நடத்த அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
எவியான் நகரத்திலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெனீவாவில், G7 எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் பல வாரங்களாக போராட்டம் நடத்த திட்டமிட்டு வந்தனர்.
இதனையடுத்து, ஜெனீவா அதிகாரிகள் புதன்கிழமை போராட்ட பேரணிக்கான பாதையை அறிவித்துள்ளனர்.

ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு Mon Repos Park பகுதியில் இருந்து பேரணி ஆரம்பமாகும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு “வரையறுக்கப்பட்ட” அனுமதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு மற்றும் பொதுப் போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக கூடுதல் கண்காணிப்புகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.





