Local Swiss News

வின்டர்தூர் ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் – மூவர் காயம்

வின்டர்தூர் ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் – மூவர் காயம்

வின்டர்தூர் ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் – மூவர் காயம்

சூரிச் மாநிலத்தின் வின்டர்தூர் (Winterthur) ரயில் நிலையத்தில் நேற்று காலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.

Kantonspolizei Zürich தெரிவித்த தகவலின்படி, காலை 8.30 மணிக்குப் பின்னர், ரயில் நிலையத்தின் கீழ்ச் சுரங்கப்பாதை அருகே 31 வயதுடைய சுவிஸ் நபர் ஒருவர் அங்கு சென்றுகொண்டிருந்தவர்களை கத்தியால் தாக்கியுள்ளார்.

சம்பவத்துக்குப் பின்னர் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து சந்தேகநபரை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.

காயமடைந்தவர்கள் 28, 43 மற்றும் 52 வயதுடைய சுவிஸ் ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் இருவர் பின்னர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

N9

ஆனால், ஒருவரின் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சில சாட்சிகள், சந்தேகநபர் ரயில் நிலையத்திலிருந்து ஓடும் போது “Allahu Akbar” எனக் கத்தியதாக உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். எனினும், தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணைகள் தொடர்ந்துவருவதாக சூரிச் கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துக்குப் பின்னர் ரயில் நிலையத்தைச் சுற்றிய பல பகுதிகள் போலீசாரால் மூடப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. இதனால் காலை நேரத்தில் பயணிகளுக்கு போக்குவரத்து இடையூறுகளும் ஏற்பட்டன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button