சுவிட்சர்லாந்தை தாக்கிய திடீர் குளிர் அலை முன்கூட்டியே வானிலை நிபுணர்கள் எச்சரித்திருந்தபடி, சுவிட்சர்லாந்து முழுவதும் நேற்று பிற்பகல் திடீரென குளிர் காற்று அலை வீசியுள்ளது. இந்த திடீர் வானிலை மாற்றம் நாட்டின் பல பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தினசரி செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக Zurich Airport பகுதியில் பலத்த காற்று வீசியதால், பல விமானங்கள் தரையிறங்க முயன்றபோது சிக்கல்கள் ஏற்பட்டன. சில விமானங்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது முயற்சியில் மட்டுமே பாதுகாப்பாக தரையிறங்க முடிந்த நிலையில், சில விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மேலும், A1 Motorway வழியாக Zurich மற்றும் Bern இடையே பயணித்த லாரிகள் பலத்த காற்றால் கவிழ்க்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதே சமயம், Bern நகரில் திடீர் பனிப்பொழிவு ஏற்பட்டது. வானிலை கண்காணிப்பாளர்கள் தெரிவித்ததாவது, இந்த குளிர் அலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மலைப்பகுதிகளில் பலத்த காற்றும் பனிப்பொழிவும் காரணமாக பனிச்சரிவு அபாயம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. WRS