Swiss News In Tamil
சென்ட்காலன் கன்டோனில் ஹங்கேரி நாட்டைச்சேர்ந்த ஒருவருக்கு சிறை
சுவிட்சர்லாந்தின் சென்ட்காலன் கன்டோனில் ஹங்கேரி நாட்டைச்சேர்ந்த ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிகப்பட்டுள்ளது.
குறித்த நபர் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகவரம்பு உள்ள பகுதியில் 106 கிலோ மீற்றர் அதிவேகத்தில் பயணித்தமைக்காகவே இத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை ஹங்கேரியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர், சென்ட்காலனிலுள்ள 50 கிலோமீற்றர் வேகவரம்பு வீதியில் 106 கிலோமீற்றர் வேகத்தில் பயணத்துள்ளார். அதிவேக கமாராவில் சிக்கிக்கொண்ட இவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

லேசர் அளவீட்டிற்கான பாதுகாப்பு விலக்குக்குப் பிறகு அவருடைய வேக அளவு 102 கிலோமீற்றர்கள் ஆகும். இதனடிப்படையில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு அவரது ஓட்டுனர் உரிமமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






