Swiss News In Tamil

சூரிச்சில் வலதுகுறைந்தோர் இல்லத்தில் தீவிபத்து – இருவர் உடல் கருகி பலி..!

சூரிச்சில் வலதுகுறைந்தோர் இல்லத்தில் தீவிபத்து – இருவர் உடல் கருகி பலி..! நேற்று புதன்கிழமை மாலை (ஜனவரி 3, 2024) சூரிச் கன்டோன் உஸ்டரில் உள்ள ஒரு சமூக நிறுவனத்தில் (வலதுகுறைந்தோர்) ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 9:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். குறித்த நிறுவனத்தின் அறிவாற்றல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

n wide 16x9 far 2
Quelle: Kantonspolizei Zürich
Bildquelle: Kantonspolizei Zürich / BRK News

போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவை பிரிவினர், குடியிருப்பு பகுதியில் தீ பரவியதை கண்டறிந்து தீயை உடனடியாக அணைத்தனர்.

n wide 16x9 far 1
Quelle: Kantonspolizei Zürich
Bildquelle: Kantonspolizei Zürich / BRK News

கட்டிடத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று குடியிருப்பாளர்கள் உட்பட ஒரு பெண் குடியிருப்பாளர் மற்றும் ஒரு பராமரிப்பாளர், நச்சுத்தன்மையுடைய புகையை சுவாசித்தமையினால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

n wide 16x9 far
Quelle: Kantonspolizei Zürich
Bildquelle: Kantonspolizei Zürich / BRK News

31 வயதுடைய குடியிருப்பாளரும், 34 வயதுடைய குடியிருப்பாளரும் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கட்டிடம் வாழத்தகுதியற்றதாக இருப்பதாகவும், ஆரம்ப மதிப்பீடுகளின்படி, பொருள் சேதம் பல இலட்சம் பிராங்குகள் இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

wppi image polizei news240104k uster brand.1704359814432 994x550 1
Quelle: Kantonspolizei Zürich
Bildquelle: Kantonspolizei Zürich / BRK News

தீ விபத்துக்கான சரியான காரணம் தற்போது தெரியவில்லை. சூரிச் தடயவியல் நிறுவனம் மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகத்துடன் இணைந்து கன்டோனல் காவல்துறையின் தீயணைப்பு விசாரணை சேவையின் நிபுணர்களால் இது தொடர்பாக விசாரிக்கப்பட்டுவருகின்றது.

Related Articles

Back to top button