Swiss News In Tamil
சுவிட்சர்லாந்தில் தபால் கட்டணங்களின் விலை அதிகரிப்பு .!
சுவிட்சர்லாந்தில் இவ்வாண்டு முதல் பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை அதிகரிப்பை மக்கள் எதிர்நோக்கியிருந்தனர்.
இந்நிலையில் இவ்வாண்டு மேலும் சில விலை அதிகரிப்புகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிக உடல்நலக் காப்பீட்டு பிரீமியங்கள், மின்சாரக் கட்டணங்கள், வாடகைகள், பொதுப் போக்குவரத்துச் செலவுகள்அதிகரித்திருந்தன.
தற்போது கடிதங்கள் மற்றும் பார்சல்களை அனுப்புவதும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 1 முதல், சுவிஸ் போஸ்ட் அதன் விலைகளை பின்வருமாறு உயர்த்தியுள்ளது:
ஒரு நிலையான 'A Post' கடிதம் இப்போது 1.20 பிராங்குகள் - முன்பை விட 10 சென்ட் அதிகம். ஒரு 'B Post' கடிதத்தின் விலையும் 10 சென்ட்கள் அதிகம்: 2023 இல் 90 சென்ட் காணப்பட்டது. தற்போது விலை 1 பிராங்க் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.






