Swiss News In Tamil

கடன் வழங்கியவரை கொன்ற சுவிஸ் பிரஜைக்கு சிறை.!!

கடன் வழங்கிய நபர் ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

3 லட்சத்து 50 ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் கடன் பெற்றுக் கொண்ட இத்தாலிய பிரஜையை குறித்த நபர் படுகொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிஸ் பிரஜை, சிறை

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சூரிச்சியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 37 வயதான சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவருக்கு நீதிமன்றம் 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

சம்பவத்தில் 66 வயதான இத்தாலிய பிரஜை ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். கடனை திருப்பி செலுத்துவதற்கு பதிலாக கடன் வழங்கியவரை இந்த நபர் கொலை செய்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Source:- Tamilinfo

Related Articles

Back to top button