Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் பனிப்பொழிவு இல்லாத நத்தார் பண்டிகையா..?

சுவிட்சர்லாந்தில் பல பகுதிகளில் பனிப் பொழிவு ஏற்பட்ட போதிலும், இம்முறை வைற் கிறிஸ்மஸ் (white Christmas) இல்லை என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்த வாரத்தில் நாட்டில் வெப்பநிலை உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. எனவே தற்பொழுது காணப்படும் பனிப் படலமானது கிறிஸ்மஸ் பண்டிகை வரையில் நீடிக்கும் சாத்தியங்கள் குறைவு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில்,பனிப்பொழிவு,நத்தார் பண்டிகை,
சுவிட்சர்லாந்தில் பனிப்பொழிவு இல்லாத நத்தார் பண்டிகையா..?

எதிர்வரும் வாரத்தில் 5 பாகை செல்சியஸ் முதல் 13 பாகை செல்சியஸ் வரையில் வெப்பநிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேற்கத்தைய நாடுகளைச் சேர்ந்த மக்கள் வைற் கிறிஸ்மஸ் அல்லது பனிப்பொழிவுடனான கிறிஸ்மஸ் தினத்தை விசேடமாக எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=B8EgNSPAe5M

Related Articles

Back to top button