சுவிட்சர்லாந்து விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை சாதனை உயர்வு
சுவிட்சர்லாந்து விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை சாதனை உயர்வு
2025ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் விமான நிலையங்கள் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு அதிகமான பயணிகளை பதிவு செய்து புதிய உச்சத்தை எட்டியுள்ளன. Federal Statistical Office வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த ஆண்டு மட்டும் திட்டமிடப்பட்ட மற்றும் சார்ட்டர் விமானங்களின் மூலம் சுமார் 60 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை, கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன் இருந்த நிலையை விட கூட அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025இல் பயணிகள் எண்ணிக்கை 2.2 மில்லியன் அளவுக்கு, அதாவது சுமார் 4 சதவீதம் உயர்ந்துள்ளது.
பயணிகள் போக்குவரத்தில் Zurich விமான நிலையம் முன்னணியில் இருந்து 31.5 மில்லியன் பயணிகளை பதிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து Geneva விமான நிலையம் 16.7 மில்லியன் பயணிகளையும், Basel – முல்ஹவுஸ் விமான நிலையம் 9.6 மில்லியன் பயணிகளையும் கையாள்ந்துள்ளது.

சுவிட்சர்லாந்திலிருந்து பயணம் செய்தவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் ஐரோப்பிய நாடுகளுக்கே சென்றுள்ளனர் என்பது, குறுகிய தூர பயணங்கள் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.
விமானங்களின் புறப்பாடு மற்றும் தரையிறங்கல் எண்ணிக்கையும் 3 சதவீதம் அதிகரித்துள்ள போதிலும், அது இன்னும் 2019ஆம் ஆண்டின் அளவிலிருந்து 4 சதவீதம் குறைவாகவே உள்ளது. இதேவேளை, விமானம் மூலம் கொண்டு செல்லப்படும் சரக்குகளின் அளவு 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.4 சதவீதம் குறைந்துள்ளது. இது 2019இன் அளவிலிருந்து 8 சதவீத வீழ்ச்சியை காட்டுகிறது.
இந்த புள்ளிவிவரங்கள், கோவிட் தொற்றுக்குப் பின்னர் சுற்றுலா மற்றும் சர்வதேச பயணங்கள் சுவிட்சர்லாந்தில் முழுமையாக மீண்டு வந்து, விமானப் போக்குவரத்து துறை மீண்டும் வலுவடைந்துள்ளதை தெளிவாக காட்டுகின்றன.





