ப்ரீபோர்க் கன்டோனில் பேருந்தில் தீ விபத்து: பலர் உயிரிழப்பு
ப்ரீபோர்க் கன்டோனில் பேருந்தில் தீ விபத்து: பலர் உயிரிழப்பு
சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் உள்ள Kerzers நகரில் செவ்வாய்க்கிழமை மாலை பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் ப்ரீபோர்க் கன்டோனில் அமைந்துள்ள Kerzers நகரின் முக்கிய வீதியில் நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நகரம் சுவிட்சர்லாந்தின் தலைநகரான பேர்ன் நகரத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து Fribourg Cantonal Police சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட தகவலின்படி, பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பலர் காயமடைந்ததுடன் சிலர் உயிரிழந்துள்ளனர். எனினும் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை உடனடியாக வெளியிடப்படவில்லை.
தீ விபத்து ஏற்பட்ட உடனேயே அவசர உதவி சேவைகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளன. தீயணைப்பு படையினர், மருத்துவ குழுக்கள் மற்றும் காவல்துறை இணைந்து மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





