Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தின் சர்க்கஸ் ஜாம்பவான் “Freddy Nock” மரணம்

சுவிட்சர்லாந்தின் சர்க்கஸ் ஜாம்பவான் ஃப்ரெடி நாக் தனது 59 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

சுவிஸ் இதை அவரது முன்னாள் மனைவி Blick ஊடகத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார். உயர் கம்பி மீது அந்தரத்தில் நடப்பதில் இவர் சிறந்து விளங்கியவர்.

இவரது மரணத்திற்கான காரணம் இதுவரையில் தெளிவாகவில்லை. எனினும் அது தொடர்பாக ஆர்காவ் கன்டோனல் போலீசார் விசாரணைகளை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Hochseilartist Freddy Nock ist tot

ஃப்ரெடி நாக், நாக் சர்க்கஸ் குடும்பத்தில் இருந்து வந்தவர். உயரமான கம்பியில் நடக்கும் சாதனைகளுக்காக அறியப்பட்டார்.

கின்னஸ் சாதனை புத்தகத்தில் பல உலக சாதனைகளை படைத்துள்ளார். உதாரணமாக, 2010 ஆம் ஆண்டில், அவர் 900 மீட்டர் நீளமுள்ள உயரமான கயிற்றில் சூரிச் ஏரியைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஒரு ஸ்டண்ட்மேனாகவும் திகழ்ந்த இவர் தற்போது மரணமடைந்துள்ளது ஒட்டுமொத்த சர்க்கஸ் கலைஞர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button