சுவிட்சர்லாந்தின் நடுத்தர வர்க்கம் குறித்து புதிய தகவல்கள் வெளியீடு

சுவிட்சர்லாந்தின் நடுத்தர வர்க்கம் குறித்து புதிய தகவல்கள் வெளியீடு
சுவிட்சர்லாந்தில் மக்கள் தொகையின் பாதிக்கும் அதிகமானோர் தற்போது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்து மத்திய புள்ளிவிவர அலுவலகம் (BFS) வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 55.2 சதவீதத்தினர் நடுத்தர வர்க்கப் பிரிவில் உள்ளனர்.
இந்த வர்க்கத்தில் சேர்க்கப்படும் வருமான அளவு மிகவும் பரந்ததாக இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியாக வாழும் ஒருவருக்கு மாதாந்திர வருமானம் 4,228 முதல் 9,061 சுவிஸ் பிராங்குகள் வரை இருந்தால் அவர் நடுத்தர வர்க்கத்தில் சேர்க்கப்படுகிறார்.

அதேவேளை, 14 வயதிற்குட்பட்ட இரண்டு குழந்தைகள் கொண்ட தம்பதிகளுக்கு மாத வருமானம் 8,880 முதல் 19,028 சுவிஸ் பிராங்குகள் வரை இருந்தால் அவர்கள் நடுத்தர வர்க்கக் குடும்பங்களாக வகைப்படுத்தப்படுகின்றனர்.
சுவிட்சர்லாந்தில் வாழ்க்கைச் செலவுகள், வீட்டு வாடகை மற்றும் சுகாதார காப்பீட்டு செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார நிலைமை குறித்து அரசியல் மற்றும் சமூக விவாதங்கள் அதிகரித்து வருகின்றன.





