Swiss News In Tamil

சூரிக்கில் ZH 11 வாகன எண் பலகை ஏலம் : கன்டோனுக்கு கோடிக்கணக்கான வருவாய்..!

சூரிக்கில் ZH 11 வாகன எண் பலகை ஏலம் : கன்டோனுக்கு கோடிக்கணக்கான வருவாய்..!

சுவிட்சர்லாந்தின் சூரிக் கன்டோனில் அண்மையில் நடைபெற்ற வாகன எண் பலகை ஏலத்தில், ZH 11 என்ற அரிய எண்ணுக்கான ஏலம் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த எண் பலகைக்கான இறுதி ஏலத் தொகை 1 லட்சத்து 60 ஆயிரம் சுவிஸ் ஃப்ராங்குகளாக நிர்ணயிக்கப்பட்டது. இது, கடந்த 2024 ஆம் ஆண்டு ZH 24 என்ற எண் பலகைக்காக செலுத்தப்பட்ட சாதனைத் தொகையான 2 லட்சத்து 99 ஆயிரம் ஃப்ராங்குகளை விட குறைவாகும்.

ZH 11 எண் பலகைக்கான ஏலத்தில் மொத்தமாக 141 பேர் பங்கேற்றனர். ஆனால், ஏலத் தொகை 1 லட்சத்து 60 ஆயிரம் ஃப்ராங்குகளை கடந்த பிறகு, மூன்று பேரே தொடர்ந்து போட்டியிட்டதாக சூரிக் சாலை போக்குவரத்து அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ஏல இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ZH 11 என்பது சூரிக் கன்டோனில் இதுவரை ஏலத்தில் விடப்பட்ட மிகக் குறைந்த எண்ணுடைய எண் பலகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு மாறாக, சமீபத்தில் சொலுத்தூர்ன் கன்டோனில் SO 1 என்ற எண் பலகைக்கான ஏலத்தில் சிக்கல் ஏற்பட்டது. மிகக் குறைந்த தொகை கொண்ட பல போலி ஏலங்கள் வந்ததால் அதிகாரிகள் ஏலத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. Inzest என்ற புனைப்பெயரை பயன்படுத்திய ஒருவர், ஒரு மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வரை ஏலம் வைத்திருந்ததும், அது முந்தைய அதிகபட்ச ஏலத் தொகையின் இரட்டிப்பாக இருந்ததும் பின்னர் தெரியவந்தது.

N3 7

சூரிக் கன்டோனில் நடைபெறும் ஏலங்கள் இதுபோன்ற சர்ச்சைகளின்றி சீராக நடைபெறுகின்றன. ஐந்து இலக்கங்களோ அல்லது அதற்கு குறைவான எண் பலகைகள், மேலும் சில சிறப்பு ஆறு இலக்க இணைப்புகள் ஆகியவை ஒவ்வொரு வாரமும் இணையத்தின் மூலம் ஏலத்தில் விடப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளில், இந்த வாகன எண் பலகை ஏலங்கள் மூலம் கோடிக்கணக்கான சுவிஸ் ஃப்ராங்குகள் வருவாயாக கிடைத்துள்ளன. இந்த நிதி முழுமையாக சூரிக் கன்டோனின் அரசுக் காசகத்தில் சேர்க்கப்பட்டு, பொது சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகின்றன.

© KeystoneSDA

Related Articles

Back to top button