Swiss News In Tamil

பெர்ன் ரயில் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பெர்ன் ரயில் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பெர்ன் நகரில், வீடற்றவர்கள் மற்றும் கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது – குறிப்பாக ரயில் நிலையம் மற்றும் தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இவ்வாறானவர்கள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.. நகரத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து செயல்படும் “பிண்டோ” என்ற சமூகத் திட்டமும் இதை உறுதிப்படுத்துகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அந்தக் குழு 14 வீடற்றவர்களைக் கணக்கிட்டது. ஆனால் இன்று அதன் தொகை 58 ஆக கணக்கிடப்பட்டுள்ளது.

News fur die Schweiz Nau

பாதிக்கப்பட்டவர்களில் பலர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்லது சுவிஸ் குடிமக்கள் ஆகும்., வேலை செய்தாலும், வாழ்க்கையை நடத்த முடியாமல் தவிக்கின்றனர். சிலருக்கு சமூக உதவி அல்லது சுகாதார காப்பீடு கிடைக்காது. குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அனைத்து ஆதரவு அமைப்புகளையும் இழந்து மருத்துவ பராமரிப்பு இல்லாமல் தெருக்களில் வாழ்கின்றனர்.

“பிண்டோ” இயக்குனர் சில்வியோ ஃப்ளூக்கிகரின் கூற்றுப்படி, வன்முறையும் அதிகரித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஊழியர்கள் அடிக்கடி தாக்கப்படுகிறார்கள் – கத்திகள் அல்லது Pepper Spray தெளிப்பு உட்பட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் இவ்வாறான பிரச்சினைகளை பேர்ன் நகரம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button