Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் இருந்து உள்ளாடையைில் மறைத்து தங்கம் கடத்திய இருவர் கைது

சுவிட்சர்லாந்தில் இருந்து உள்ளாடையைில் மறைத்து தங்கம் கடத்திய இருவர் கைது

உள்ளாடையில் மறைத்து வைத்து பத்து மில்லியன்யூரோ பெறுமதியான தங்கம் கடத்திய இரண்டு நபர்கள் பிரான்ஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் இருந்து இந்த தங்கம் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. துனிசியாவைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட இருவர் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

news01 1
© AI

இந்த இருவரும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள தனியார் இல்லமொன்றில் இருந்து ரோலெக்ஸ் கடிகாரம், சங்கிலிகள், காதணிகள், வைரக் கற்கள் பதிக்கப்பட்ட மோதிரங்கள் உள்ளிட்ட நகைகளை திருடியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 10 மில்லியன் யூரோவாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த மதிப்பு இன்னும் உறுதிசெய்யப்பட வேண்டியுள்ளது.

கார் டி லியோன் (Gare de Lyon) ரயில் நிலையத்தில் டிஜிவி (TGV) ரயிலில் இருந்து இறங்கிய இருவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, ஒருவரின் உள்ளாடை மற்றம் காலுறை என்பனவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

©KeystoneSDA

Related Articles

Back to top button