Swiss News In Tamil

சுவிஸ் ஊழியர்களுக்கு அடுத்தாண்டு 2% சம்பள உயர்வு தேவை : ஊழியர் சங்கம்

சுவிஸ் ஊழியர்களுக்கு அடுத்தாண்டு 2% சம்பள உயர்வு தேவை : ஊழியர் சங்கம்

சுவிட்சர்லாந்து ஊழியர்கள் சார்பில் செயல்படும் Travail suisse என்ற சங்கம், 2026 ஆம் ஆண்டில் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் 2 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட சம்பளக் குறைபாடுகள் மற்றும் அதிகரித்த வாழ்க்கைச் செலவுகளை ஈடுசெய்யும் விதமாக இந்த உயர்வு அவசியம் என சங்கம் வலியுறுத்தியது.

Employees association demands a 2 percent wage increase for next year
@Keystone

2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இல்லாத அளவுக்கு உண்மையான சம்பள மதிப்பு குறைந்தது என Travailsuisse சுட்டிக்காட்டியுள்ளது. இதனுடன், சுகாதாரக் காப்பீட்டு  கட்டணங்கள் 2023 முதல் 2025 வரை 5.4 முதல் 8.1 சதவீதம் வரை உயர்ந்துள்ளன, மேலும் 2026 ஆம் ஆண்டில் கூடுதல் 4% உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், சுவிஸ் ஊழியர்களின் வாங்கும் திறனை (purchasing power) காக்கும் ஒரே வழி சம்பள உயர்வுதான் என Travailsuisse வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் மதிப்பீட்டுப்படி, தற்போதைய பொருளாதாரச் சுமை குடும்பங்களின் அடிப்படைச் செலவுகள் கூட பாதிக்கப்படக் கூடிய அளவுக்கு சென்றுவிட்டதால், 2% சம்பள உயர்வு “தாமதமானாலும் தவிர்க்க முடியாதது” என்று கருதப்படுகிறது.

@Keystone

Related Articles

Back to top button