Swiss News In Tamil

சொலர்த்தூன் Däniken இல் குழந்தைகளை மோதி தள்ளிய மோட்டார் சைக்கிள்.!

சொலர்த்தூன் Däniken இல் குழந்தைகளை மோதி தள்ளிய மோட்டார் சைக்கிள்.!

சொலர்த்தூன் மாநிலத்தின் டானிகன் நகரில் பாதசாரி கடவையை கடக்க முயன்ற இரண்டு குழந்தைகளை ஒரு கார் மோதியதில் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :-

நேற்றைய தினம் வியாழக்கிழமை ஒரு சிறிய மோட்டார் சைக்கிள் ஓட்டி சந்த சாரதி பாதசாரி கடக்கும் கடவையை பயன்படுத்திய சிறிய குழந்தைகள் இருவர் மீது திடீரென மோதியுள்ளார்.

சொலர்த்தூன்,Däniken,குழந்தைகளை,மோட்டார் சைக்கிள்,SwissTamilnews,Soluthurn tamil people
சொலர்த்தூன் Däniken இல் குழந்தைகளை மோதி தள்ளிய மோட்டார் சைக்கிள்.!

இச்சம்பவம் மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் குழந்தைகள் இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு ஆம்புலன் வண்டி வரவழைக்கபட்டு பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியபடவில்லை. மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கு எந்த பாதிப்புகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விபத்தின் காரணமாக 200 மீற்றர் தாரத்திற்கு சுமார் 3 மணி நேரம் வீதி போக்குவரத்து தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button