சுவிட்சர்லாந்தில் கோவிட் சட்டம் 2024ம் ஆண்டு வரை நீடிப்பு
சுவிட்சர்லாந்தில் கோவிட்19 சட்டம் எதிர்வரும் 2024ம் ஆண்டு வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. முதல் தடவையாக கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் திகதி அமுல்படுத்தப்பட்டது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் கோவிட் சட்டம் காலாவதியாகின்றது. எவ்வாறெனினும், எதிர்வரும் இரண்டு குளிர்காலங்களுக்கு சட்டத்தின் சில பிரிவுகளை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

இதன்படி சுவிட்சர்லாந்தின் கோவிட் சட்டம் எதிர்வரும் 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதி வரையில் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. நோய்த் தொற்று மீண்டும் நாட்டில் பரவினால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளன.
கோவிட் பரிசோதனைகளுக்காக அரசாங்கம் கடந்த ஆண்டு 2.1 பில்லியன் பிராங்குகளையும், இந்த ஆண்டில் 1.6 பில்லியன் பிராங்க்குகளையும் செலவிட்டுள்ளது./





