Swiss News In Tamil
ரஸ்யாவின் 7.5 பில்லியன் பிராங்க் சொத்துக்களில் கைவைத்த சுவிஸ் அரசு
ரஸ்யாவின் சுமார் 7.5 பில்லியன் சுவிஸ் பிராங்க் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஸ்யாவின் போருக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டு வரும் தடைகளின் அடிப்படையில இந்த பணம் முடக்கப்பட்டுள்ளது.
ரஸ்ய செல்வந்தர்களின் விருப்பத்திற்குரிய நாடுகளில் ஒன்றாகவே சுவிட்சர்லாந்து காணப்படுகின்றது. இவ்வாறான ஓர் பின்னணியில் ரஸ்யாவின் சொத்துக்களை சுவிஸ் அரசாங்கம் முடக்கி வருகின்றது.

பெர்துவாக நடுநிலைக் கொள்கைகளை பின்பற்றி வரும் சுவிட்சர்லாந்து ரஸ்ய – உக்ரைன் போரில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானங்களுக்கு முக்கியத்துவம் அளித்து தடைகளை அறிவித்து வருகின்றது.
ரஸ்ய பிரஜைகளின் வைப்புக்களை சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.





