Swiss News In Tamil
சூரிச்சில் 39 வயது நபரை கத்தியால் குத்திய 16 வயது சிறுவன் கைது
சூரிச்சில் 39 வயது நபரை கத்தியால் குத்திய 16 வயது சிறுவன் கைது.!! சூரிச் நகர காவல்துறை நேற்று வியாழனன்று 16 வயது இளைஞரைக் கைது செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சூரிச் மாவட்டம் 4 இல் உள்ள பேக்கரியில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கத்தியால் குத்தி ஒரு நபரின் தலையில் காயம் ஏற்படுத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 39 வயதான துருக்கிய நபர், காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக இன்று வெள்ளிக்கிமை சூரிச் கன்டோனல் போலீசார் அறிவித்துள்ளனர்.
குறித்த வாக்குவாதம் ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பாக இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Source & image :- Kanton Polizei zurich





