Swiss News In Tamil

சூரிச் Wädenswil பகுதியில் மூதாட்டியிடம் பலவந்த திருட்டு; : 17 வயது சிறுவன் கைது.!

சூரிச் Wädenswil பகுதியில் மூதாட்டியிடம் பலவந்த திருட்டு; : 17 வயது சிறுவன் கைது.!

சூரிச் மாநில காவல்துறை புதன்கிழமை ஜூன் 25, 2025 அன்று வாடென்ஸ்வில் ஒரு மூதாட்டியை தாக்கி அவரது கடிகாரத்தை பலவந்தமாக பறித்துக் கொண்ட 17 வயதுடைய இளைஞரை கைது செய்துள்ளது.

எப்படி நடந்தது?

இவ்விபரீதமான சம்பவம் புதன்கிழமை இரவு சுமார் 11:50 மணியளவில் அவ் (Au) பகுதியில் உள்ள ஓபர்ரோர்ட்வெக் (Oberortweg) என்ற இடத்தில் இடம்பெற்றது. அப்போது, குறித்த இளைஞன் தெருவில் தனியாக நடந்துசென்ற 70 வயதுடைய ஒரு மூதாட்டியின் அருகே சென்று, திடீரென அவரை தாக்கி, அவருடைய மதிப்புமிக்க பல நூறு பிராங்குகள் மதிப்புள்ள கைகடிகாரத்தை பறித்து விட்டுச் சென்றுள்ளார்.

wadenswil
Quelle: Kantonspolizei Zürich
Bildquelle: Symbolbild ©Alexander Raths/Shutterstock.com

காவல்துறை வேகமாக செயல்பட்டது

சம்பவத்திற்குப் பிறகு, சூரிச் மாநில காவல்துறையினர் விரைவில் தடய விசாரணை மேற்கொண்டு, சுமார் ஒரு மணி நேரத்திற்குள் சந்தேகத்திற்குரிய நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

காவல்துறை தகவலின்படி, கைது செய்யப்பட்டவர் 17 வயதுடைய அல்ஜீரிய பிரஜை என தெரியவந்துள்ளது.. அவரை காவல்துறையினர் விசாரணைக்கு உட்படுத்திய பிறகு, சூரிச் மாநில நீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இத்தகைய சம்பவங்கள் ஒவ்வொரு மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இரவு நேரங்களில் தனியாகச் செல்லும்போது அதிக முன்னேற்பாடும் பாதுகாப்பும் அவசியம் என்பதை காவல்துறை மீண்டும் நினைவுபடுத்துகிறது. மேலும் தகவல்களுக்கு உங்கள் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் தொடர்பு கொள்ளலாம்.

Quelle: Kantonspolizei Zürich
Bildquelle: Symbolbild ©Alexander Raths/Shutterstock.com

Related Articles

Back to top button