Swiss News In Tamil

உடல் நல பிரச்சினைகள் கொண்டவர்களுக்காக சுவிஸ் ரயில்வேயின் நடவடிக்கை

உடல் நல பிரச்சினைகள் கொண்டவர்களுக்காக சுவிஸ் ரயில்வேயின் நடவடிக்கை

கண்ணுக்கு புலப்படாத சில உடல் நல பிரச்சினைகள் உடையவர்களுக்காக சுவிஸ் ரயில்வே நல்லதொரு நடவடிக்கையைத் துவக்கியுள்ளது.

ஆட்டிஸம், பார்க்கின்சன் மற்றும் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு (Attention deficit hyperactivity disorder, ADHD) முதலான, கண்ணுக்கு புலப்படாத சில உடல் நல பிரச்சினைகள் உடையவர்களுக்காக badge ஒன்றை உருவாக்கியுள்ளது சுவிஸ் ஃபெடரல் ரயில்வே.

அந்த badge, பச்சை நிற பின்னணியில், சூரியகாந்திப் பூக்களின் படங்களைக் கொண்டதாக இருக்கும். இப்படிப்பட்ட badge அணிந்தவர்கள், கண்ணுக்கு புலப்படாத சில உடல் நல பிரச்சினைகள் உடையவர்கள் என மற்றவர்கள் தெரிந்துகொள்வதற்காக அவர்களுக்கு இந்த badge வழங்கப்படுகிறது.

25 684fcb5f8197a

அத்தகைய நபரின் பயணச்சீட்டை பரிசோதிக்கும்போது, பயணச்சீட்டு பரிசோதகர்கள் பொறுமையுடன் அணுகவேண்டும், அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்பதற்காக இந்த badge வழங்கப்படுகிறது.

இந்த badge குறித்து ரயில்வே ஊழியர்களுக்கு தெரியப்படுத்துவதுடன், அதை அணிந்தவர்களை எப்படி கையாளவேண்டும் என அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. முதலில், சூரிக், ஜெனீவா, St Gallen, Zug மற்றும் Vaud மாகாணங்களில் துவக்கப்படும் இந்த திட்டம், 2026ஆம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் பின்பற்றப்பட உள்ளது.

Related Articles

Back to top button