சூரிச் Volketswil பகுதியில் கைது செய்யப்பட்ட இலங்கை பெண்.?
சூரிச் Volketswil பகுதியில் கைது செய்யப்பட்ட இலங்கை பெண்.?
சுவிட்சர்லாந்து சூரிச் Volketswil பகுதியில் 45 வயதான தமிழ் பெண் ஒருவர் , தனது கணவவருடன் கார் உள்ளே பேசிக்கொண்டிருந்த பெண் மீது கொலைவெறித்தாக்குதல் நடாத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் தாக்குதல் நடத்தியதற்காக குறித்த பெண் சம்பவ இடத்திலையே போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய பெண்ணின் கணவர் இன்னுமொரு பெண்ணுடன் காரில் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிமையில் பேசிக்கொண்டிருந்தமைக்காகவே குறித்த நபரின் மனைவியால் மரச்சட்டத்தால் இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு, காரில் இருந்த பெண் தப்பியோடிய போதும் குறித்த நபரின் மனைவி ஓட ஓட தாக்குதல் நடாத்தியதாகவும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் பார்வையிலேயே போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை பொதுவெளியில் பார்த்த சிலர் உடனடியாக போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் உடனடியாக விரைந்து வந்த போலீசார் அவ்விடத்திலையே தாக்குதல் நடத்திய பெண்ணை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், குறித்த பெண் மீது தாக்குதல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் தொடரப்படலாம் என கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் தனிநபர் உரிமை மிக முக்கியமானது. இங்கு, எந்தவொரு நபரையும் தாக்குவதற்கு சட்டம் அனுமதிக்காது. எனவே, நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், நம் கலாச்சாரம், பண்பாடுகளை காப்பாற்றி, நாகரிக முறையில் நடந்துகொள்வது அவசியம். குறித்த சம்பவம் தொடர்பான சம்மந்தப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் பொதுவெளியில் வெளியாகியிருந்தாலும் தனியுரிமையை கருத்தில் கொண்டு நாம் தவிர்த்துள்ளோம். மேலும் இது நேரடியாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதோடு இது தொடர்பில் சூரிச் கன்டோனல் போலீசார் எதுவித செய்திகளும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
@ Source :- https://vampan.net/67923/





