Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் கால்பந்தாட்டத்தில் கலக்கும் ஈழத்தை சேர்ந்த இளைஞன்!

சுவிட்சர்லாந்தில் கால்பந்தாட்டத்தில் கலக்கும் ஈழத்தை சேர்ந்த இளைஞன்!

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சுவிஸ் செலென்ஜ் லீக் கால்பந்தாட்ட போட்டிகளில் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் அஸ்வின் பாலரூபன் தனது அபார திறமையால் அனைவரையும் ஈர்த்துள்ளார்.

இலங்கை தமிழரான அஸ்வின், எப்.சீ துன் கழகத்தின் சார்பில் விளையாடி வரும் நிலையில், அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளார். ஐரோப்பிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இந்த தொடர் போட்டியில் எப்.சீ துன் கழகம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

சுவிட்சர்லாந்தில்

அஸ்வினின் அர்ப்பணிப்பு மற்றும் ஆட்டத் திறமை சமூக ஊடகங்களில் பெருமளவில் பாராட்டப்படுகின்றன. 23 வயது நிரம்பிய இவர் கடந்த ஒரு வருடமாக குறித்த கிளப்பில் சேர்ந்து தனது திறமையை வெளிக்காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பல்வேறு கழக மட்டப் போட்டிகளிலும் தனது திறமையை நிரூபித்து வரும் அஸ்வின், தமிழர்களின் பெருமையை உலக அரங்கில் காட்டி வருகிறார்.

Related Articles

Back to top button