Swiss News In Tamil

Pfäffikon இல் வீடு ஒன்றில் கொள்ளையடித்த நபர் கைது

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை Pfäffikon இல் நபர் ஒருவர் கன்டோனல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வீடு ஒன்றினுள் புகுந்து கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகாலை 5:30 மணியளவில்இ சூரிச் கன்டோனல் போலீஸ் செயல்பாட்டு மையத்திற்கு கிடைத்த தகவலின் படிஇ நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து திருடிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக ஒரு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் தேடுதலில் ஈடுபட்ட கன்டோனல் போலீசார் சிறிது நேரத்திற்குப் பிறகுஇ பாதாசாரி கடவை ஒன்றில் வைத்து ஒரு இளைஞனை சோதனையிட்டபோதுஇ ​​அவரிடம் இருந்து பல்வேறு மதிப்புமிக்க பொருட்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

wppi image polizei news© Kantonspolizei Zuerich 54 994x550 1

மேலதிக விசாரணையில் கைப்பற்றப்பட்ட பெறுமதியான பொருட்கள்இ அவர் முன்னைய கொள்ளைச் சம்பவத்தின் போது திருடிச் சென்ற பொருட்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் 17 வயதான மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவர் எனவும் மேலதிக விசாரணைகளுக்காக வழங்கறிஞரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Quelle: Kantonspolizei Zürich
Titelbild: Symbolbild © Kantonspolizei Zürich

Related Articles

Back to top button