Swiss News In Tamil

சுவிஸ் பிராங்க் பெறுமதி குறித்து வெளியான தகவல்

சுவிஸ் பிராங்க் பெறுமதி குறித்து வெளியான தகவல் – எதிர்வரும் ஆண்டில் சுவிஸ் பிராங்கின் பெறுமதி ஸ்திரமான நிலையில் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக யூரோவிற்கு எதிரான சுவிஸ் பிராங்கின் பெறுமதி ஸ்திரமான நிலையில் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அண்டை நாடுகளில் கொள்வனவு செய்வதில் தாக்கம் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. சுவிஸ் பிராங்கின் ஸ்திரத்தன்மை நாடுகளில் கொள்வனவு செய்வதற்கு சாதகமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

சுவிஸ் பிராங்க், switzerland news today
சுவிஸ் பிராங்க்

ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ள காரணத்தினால் பிராந்திய வலயத்தில் ஒரே நாணய அலகினை பயன்படுத்தும் முன்மொழிவுகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

எனவே எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிலும் சுவிஸ் பிராங்கின் பெறுமதி ஸ்திரமான நிலையில் பேணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் எதிர்வரும் ஆண்டிலும் சுவிஸ் ஃப்ராங்கிற்கான கேள்வி காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சுவிஸ் பிராங்கின் ஸ்திரமான நிலைமையானது எல்லை தாண்டிய கொள்வனவுகளுக்கு சாதகமான நிலையை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button