Swiss News In Tamil

பாசல் நகரில் பட்டப்பகலில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்.!!

பாசல் நகரில் கடந்த புதன் கிழமை பட்டப்பகலில் கொள்ளைச்சம்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அக்டோபர் 25 2023 அன்று பிற்பகல் 3:30 மணிஅளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்செல்ஸ் வீதி வழியாக பயணித்த 67 வயதுடைய ஒருவரை அடையாளம் தெரியாத இருவர் தாக்கி அவரிடம் இருந்த பெறுமதி மிக்க ஆபரங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பாசல், கொள்ளைச்சம்பம், Basel, SwissTamilnews, swisstamil24

சம்பவ இடத்திற்கு விரைந்த பாசல் நகர போலீசார் காயமடைந்த நபரின் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளதாக தெரியவருகிறது.

சந்தேக நபர்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு சம்பவம் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் பாசல் கன்டோனல் போலீசாருக்கு அறிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button