Swiss News In Tamil

சென்ட்கேலனில் உள்ள இளைஞர்களின் எடை அதிரிப்பதாக தகவல்.!

சென்ட்கேலனில் உள்ள இளைஞர்களின் எடை அதிரிப்பதாக தகவல்.! சென்ட் கேலன் மாகாணத்தில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிக எடை கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, நடுநிலைப் பள்ளியில் இந்த போக்கு குறிப்பாக கவனிக்கப்படுகிறது. வெளிநாட்டு குடியுரிமை பெற்ற குழந்தைகள் சுவிஸ் குழந்தைகளை விட இரு மடங்கு அதிக எடையுடன் உள்ளனர்.

7bcd9eda bfcb 48c6 a941 22c1309df362

சென்ட் கேலன் மாகாணத்தில் உள்ள 17 சதவீத குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிக எடை கொண்டவர்கள் என்று சென்ட் கேலன் மாகாணத்தின் சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட அறிக்கையிலையே இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

மழலையர் பள்ளியில் பத்தில் ஒரு குழந்தை எடை அதிகரிப்புடன் காணப்பட்டாலும், ஐந்தாம் வகுப்பு மற்றும் உயர்நிலைப் பள்ளியில் கிட்டத்தட்ட 20 சதவீதம் பேர் அதிக எடையுடன் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சென்ட் கேலன் மாகாணத்தில் ஐந்தாவது முறையாக உடல் நிறை குறியீட்டெண் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மாணவர்களிடமிருந்து உடல் நீளம் மற்றும் உடல் எடை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டதன் அடிப்படையிலையே குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button