பாசலில் இடம்பெற்ற பகீர் சம்பவம் : 13 வயது சிறுவனின் துணிகரம்.!!
பாசலில் இடம்பெற்ற பகீர் சம்பவம் : 13 வயது சிறுவனின் துணிகரம்.!!

பாசலில் இடம்பெற்ற பகீர் சம்பவம் : 13 வயது சிறுவனின் துணிகரம்.!!
பாசல்-லாண்ட்ஷாப்ட் கன்டோனிலுள்ள Pratteln பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவர் குடும்பக் காரை அனுமதியின்றி எடுத்துச் சென்று விபத்துக்குள்ளாக்கியுள்ளார்.
“பாசல்-லாண்ட்ஷாப்ட் போலீசார் (Polizei Basel-Landschaft)” தெரிவித்த தகவலின்படி, சம்பவம் திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்குப் பின்னர் Mühleweg பகுதியில் இடம்பெற்றது.
13 வயது சிறுவன், வீட்டிலிருந்து குடும்பத்தின் காரை எடுத்துக்கொண்டு Oberemattstrasse வழியாக Pratteln மையப்பகுதி நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.
Mühleweg அருகே சென்றபோது, அவர் முதலில் போக்குவரத்து தீவை மோதி கடந்து சென்றுள்ளார்.

அதன்பின்னர் ஏற்பட்ட வளைவில் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த சிறுவன், எதிர்ப்பாதையை கடந்து கட்டிடச் சுவரில் மோதியுள்ளார்.
மோதலின் தாக்கத்தில் கார் மீண்டும் சாலைக்கு தூக்கி எறியப்பட்டு கடுமையாக சேதமடைந்த நிலையில் நின்றது.
காரை ஓட்டிய சிறுவனும், அவருடன் இருந்த 13 வயது சிறுமியும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியுள்ளனர்.
பின்னர் சேதமடைந்த வாகனம் மீட்பு வாகனத்தின் மூலம் அங்கிருந்து அகற்றப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக“பாசல்-லாண்ட்ஷாப்ட் இளைஞர் வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையை தொடங்கியுள்ளது.
© Kapo BL





