சுவிட்சர்லாந்தில் வேலைவாய்ப்பு முறைகளை மாற்றும் செயற்கை நுண்ணறிவு
சுவிட்சர்லாந்தில் வேலைவாய்ப்பு முறைகளை மாற்றும் செயற்கை நுண்ணறிவு

சுவிட்சர்லாந்தில் வேலைவாய்ப்பு முறைகளை மாற்றும் செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு (AI) தற்போது சுவிட்சர்லாந்தில் வேலைவாய்ப்பு மற்றும் பணியாளர் தேர்வு முறைகளை வேகமாக மாற்றி வருவதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
Michael Page வெளியிட்டுள்ள “Talent Trends 2026” அறிக்கையின்படி, வேலை தேடுபவர்கள் AI தொழில்நுட்பத்தை நிறுவனங்களை விட வேகமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அறிக்கையில், சுவிட்சர்லாந்தில் வேலை தேடுபவர்களில் 86 சதவீதம் பேர் AI கருவிகளை பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், பணியாளர் தேர்வு செயல்முறைகளில் AI பயன்படுத்தும் நிறுவனங்கள் 69 சதவீதம் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், AI உதவியுடன் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஒருவரை வேலைக்கு எடுக்க அதிக வாய்ப்பை ஏற்படுத்தும் என நம்பும் நிறுவனங்கள் 39 சதவீதம் மட்டுமே என ஆய்வு காட்டுகிறது.
இதுகுறித்து Yannick Coulange கூறுகையில், “AI வேலைவாய்ப்பு விதிகளை முழுமையாக மாற்றவில்லை. ஆனால் அதன் வேகத்தை மாற்றியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும், “வேலை தேடுபவர்கள் ஏற்கனவே AI-க்கு தங்களை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். ஆனால் பணியாளர் தேர்வு நடைமுறைகள் இன்னும் அதனை பின்தொடர முயற்சித்துக்கொண்டிருக்கின்றன” என்றும் அவர் கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் CV தயாரித்தல், கவர் லெட்டர் எழுதுதல், நேர்முகத் தேர்வு தயாரிப்பு உள்ளிட்ட பல கட்டங்களில் AI பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், எதிர்கால வேலைவாய்ப்பு சந்தையில் இது முக்கிய பங்கு வகிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
© KeystoneSDA





