சுவிஸில் காலணி உற்பத்தியை நிறுத்தும் Bally – மேலும் வேலை இழப்புகள்
சுவிஸில் காலணி உற்பத்தியை நிறுத்தும் Bally – மேலும் வேலை இழப்புகள்

சுவிஸில் காலணி உற்பத்தியை நிறுத்தும் Bally – மேலும் வேலை இழப்புகள்
பிரபல சுவிஸ் ஆடம்பர காலணி நிறுவனமான Bally, சுவிட்சர்லாந்தில் தனது காலணி உற்பத்தியை முழுமையாக நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
டிசினோ கன்டோனிலுள்ள Caslano தொழிற்சாலையில் நடைபெற்று வந்த உற்பத்தி நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நிறுத்தப்பட உள்ளன.
இதன் மூலம் அங்கு பணியாற்றி வந்த கடைசி 27 உற்பத்தி ஊழியர்களும் வேலை இழக்கவுள்ளனர்.
இதே தொழிற்சாலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 250 பேர் வரை பணியாற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நிர்வாக அலுவலகங்கள் மட்டும் தொடர்ந்தும் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த முடிவு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க முதலீட்டு நிறுவமான Regent LP Bally நிறுவனத்தை கைப்பற்றியதற்குப் பின்னர் எடுக்கப்பட்ட மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய உற்பத்தித் துறைக்கு இது மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.
ஏற்கனவே தையல் இயந்திர உற்பத்தி நிறுவனமான Bernina தனது உற்பத்தியை தாய்லாந்துக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.
இதனால், உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு மற்றும் உலகளாவிய போட்டி காரணமாக சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய உற்பத்தித் துறைகள் வெளிநாடுகளுக்கு நகரும் நிலை அதிகரித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.





