பேர்ன் பேரூந்து தரிப்பிடத்தில் காத்திருந்தவர்களுக்கு நடந்த அதிர்ச்சி.!!
பேர்ன் பேரூந்து தரிப்பிடத்தில் காத்திருந்தவர்களுக்கு நடந்த அதிர்ச்சி.!! இன்று சுவிட்சர்லாந்தின் பல கன்டோன்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவியது. மழை காரணமாக பேர்ன் நகரத்தில் ஒரு சுவாரசியமான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது மக்களை சற்று கோபத்திற்கு உள்ளாக்கிய சம்பவமும் கூட. பேர்ன்னில் உள்ள விக்டோரியாப்ளாட்ஸ் பேரூந்து தரிப்பிடத்திலையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல பயணிகள் பேரூந்துக்காக காத்திருந்தாலும் பேரூந்து வரும் வரை, கனமழை காரணமாக சற்று தொலைவில் உள்ள கூரையின் கீழ் ஒதுங்கி காத்திருந்தார்கள்.
அதன்பின்னர் குறித்த பேரூந்து அந்த தரிப்பிடத்தில் நிறுத்தாது சென்றுள்ளதால் காத்திருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். வேலைக்கு செல்வதற்காக காத்திருந்த பலர் ஆத்திரத்தில் நாங்களும் இந்த நாட்டில்தான் வாழுகிறோம் என நொந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் உண்மையில் ஓட்டுனர் குறித்த தரிப்பிடத்தில் பயணிகள் காத்திருக்கவில்லை என்பதால் நேராக பேரூந்தை நிறுத்தாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இது வேண்டுமென்ற நடக்கவில்லை என அவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பயணிகள் தரிப்பிடாத்தில் இல்லாவிட்டாலும் பேரூந்து ஓட்டுனர் வேகத்தை குறைத்து அவ்விடத்தை சரியாக பார்த்துவிட்டு செல்லவது முக்கியம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





