Swiss News In Tamil

Basel நகரத்தில் நபர்களுக்கிடையே இடம்பெற்ற மோதல்..!!

Basel நகரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நபர்களுக்கிடையிலான மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாசல் நகர போலீசாரின் அறிவிப்பின் படி குறித்த சம்பவம் அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. 42 வயதுடைய ஒரு நபர் இன்னும் சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக கன்டோனல் போலீசார் தெரிவித்தனர்.

Basel, மோதல், Basel-Stadt, Angriff – Nigerianer

விடுதியில் தங்கியிருந்த நபரையே நான்கு பேர் கொண்ட குழு ஒன்று தாக்கி காயப்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

கிரிமினால் போலீசாருக்கு கிடைத்த அவசர தகவலை அடுத்து போலீசார் நான்கு பேரையும் கைது செய்து விசாரணைக்கு பின்னர் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பகட்ட விசாரணைகளின் போது விருந்துபசாரத்தின்போதே வாக்குவாதம் ஏற்பட்டு அதில் ஒருவர் ஆபத்தான பொருளைக்கொண்டு தாக்குதல் நடத்தியாக தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் 38 முதல் 45 வயதுக்குட்பட்ட நான்கு நைஜீரிய பிரஜைகள் என போலீசார் தெரிவித்தனர்.

Quelle: Kanton Basel-Stadt Justiz- und Sicherheitsdepartement

Related Articles

Back to top button