18,000 பிராங்குகள் ரொக்கம்: தொலைபேசி மோசடி செய்த இருவர் கைது
18,000 பிராங்குகள் ரொக்கம்: தொலைபேசி மோசடி செய்த இருவர் கைது
18,000 பிராங்குகள் ரொக்கம்: தொலைபேசி மோசடி செய்த இருவர் கைது திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் ஜூரிச் கன்டோனல் காவல் துறையினர் தொலைபேசி மோசடியில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர்.
சந்தேகநபர்கள் 44 வயதான ஜேர்மன் மற்றும் 32 வயதான வடக்கு மசிடோனியன் பிரஜைகளாவர்.
திங்கட்கிழமை, 67 வயது முதியவர் ஒருவர் தனது பணம் ஆபத்தில் இருப்பதாகக் கூறி, போலீஸ் அதிகாரி போல் நடித்துக் கொண்டிருந்த ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. அந்த நபர் அழைப்பில் இருக்கும்போதே உண்மையான சூரிச் பொலிசாருக்கு முதியவர் விரைவாக தகவல் தெரிவித்தார்.

இதன் பின்னர் விரைந்து செயற்பட்ட சூரிச் போலீசார் மோசடி செய்ய முற்பட்ட ஜெர்மன் நபரை கைது செய்தனர்
மூன்று நாட்களுக்குப் பிறகு, 79 வயதான பெண் ஒருவருக்கு போலி வங்கி பாதுகாப்பு அதிகாரியிடமிருந்து அழைப்பு வந்தது. பின்னர் அவர் ஒரு போலி போலீஸ் அதிகாரியுடன் இணைக்கப்பட்டார், அவர் CHF 18,000 ஐ வங்கியில் இருந்து எடுக்கும்படி கூறினார். பின்பு அந்த நோட்டுக்களின் வரிசை எண்களை வழங்குமாறு கூறினார்.
இது தொடர்பாகவும் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், வட மாசிடோனிய மோசடி செய்பவரை போலீசார் விரைவில் கைது செய்தனர்.
Credits (c) zueritoday





