Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் இனி அனைவரும் .Swiss Domain பெயரை பெறலாம்

சுவிட்சர்லாந்தில் இனி அனைவரும் .Swiss Domain பெயரை பெறலாம் நிறுவனங்கள் மற்றும் பொது நிர்வாகங்கள் மத்தியில் 2015 முதல் பயன்பாட்டில் இருந்த டொட் சுவிஸ் என்ற டொமைனை; தற்போது தனிநபர்களுக்கு பெறமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த டொமைன் ஏப்ரல் 24 முதல் தனிப்பட்ட நபர்களுக்கு அணுகக்கூடியதாக மாறும் என மத்திய தகவல் தொடர்பு அலுவலகம் அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில்

‘சுவிஸ் நாட்டவராகவோ அல்லது சுவிட்சர்லாந்தில் வசிக்கும்வரையோ, அனைவரும் இந்த டொமைன் பெயரைப் பெறலாம். இதனை பதிவு செய்ய, உங்கள் சமூக பாதுகாப்பு எண்ணை வழங்க வேண்டும்.

மேலும் குறித்த டொமைன் பெயர் ஏற்கனவே சுவிட்சர்லாந்தின் பயன்பாட்டில் உள்ள சீ எச் என்ற டொமைன் பெயரை விட விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தில்

டொட் சுவிஸ் டொமைன் பெயரைப் பெறுவதற்கு வருடத்திற்கு 90 முதல் 120 பிராங்குகள் வரை செலுத்தவேண்டும். சீ எச் டொமைன் பெயர் ஆண்டுக்கு 5 முதல் 20 பிராங்குகள் வரையே செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button