Swiss News In Tamil

சுவிஸ் உள்ளிட்ட 35 நாட்டவர்களுக்கு இலங்கை இலவச விசா

சுவிஸ் உள்ளிட்ட 35 நாட்டவர்களுக்கு இலங்கை இலவச விசா

சுவிஸ் உள்ளிட்ட 35 நாட்டவர்களுக்கு இலங்கை இலவச விசா 35 நாடுகளின் பிரஜைகள் இலவச விசா வசதியின் கீழ் இலங்கைக்கு பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன் படி, ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு இந்த வாய்ப்பு குறித்த நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலவச விசா

பிரித்தானியா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், அவுஸ்ரேலியா, டென்மார்க், போலந்து, கசகஸ்தான், சவூதி அரேபியா,. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், சீனா, இந்தியா, இந்தோனேஷியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேஷியா, ஜப்பான், பிரான்ஸ்,  அமெரிக்கா, கனடா, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஒஸ்ரியா, இஸ்ரேல், பெலாரஸ், ஈரான், சுவீடன், தென் கொரியா, கத்தார், ஓமன், பஹ்ரைன், நியூசிலாந்து ஆகிய 35 நாடுகளிற்கே இந்த இலவச விசா வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்கும் முகமாக நாட்டின் சுற்றுலாத்தளங்களை மேம்படுத்தும் நோக்கில் பல வேலைத்திட்டங்களை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது.

இதேவேளை, நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button