Swiss News In Tamil

சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் ‘பொது ஒளி விழா’ 2023

சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் நடத்தும், இவ்வாண்டிற்கான ‘பொது ஒளி விழா’ நிகழ்வு நாளை 23 டிசம்பர், 2023 அன்று நடைபெறவுள்ளது.

இயேசு பிறப்பு மற்றும் புத்தாண்டு பெருவிழாக்களை முன்னிட்டு இடம்பெறும் இந்நிகழ்வில், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளது.

குறிப்பாக கரோல் கீதங்கள், பரதநாட்டியம், கோலாட்டம், நாடகங்கள், அபிநயநடனம் மற்றும் வில்லுப்பாட்டு என்பன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுமாத்திரமின்றி இளையோர் இணைந்து நடாத்தும் நாட்டுக்கூத்தும் இடம்பெறவிருக்கின்றது.

சொலுத்தூர்ன் கன்டோனில், நாளை மாலை 2:30 க்கு இடம்பெறும் இந்நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் சுவிஸ் வாழ் தமிழர்களை அழைத்துள்ளார்கள்.

அனுமதி முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

65646465bc37e

Related Articles

Back to top button