ஜேர்மனியின் கொலை குற்றவாளி பேர்ன் ரயில் நிலையத்தில் கைது
ஜேர்மனியின் கொலை குற்றவாளி பேர்ன் ரயில் நிலையத்தில் கைது
ஜேர்மனியின் கொலை குற்றவாளி பேர்ன் ரயில் நிலையத்தில் கைது தெற்கு ஜேர்மனியின் ஃப்ரீபர்க் நகரில்இ ஒரு வாரத்திற்கு முன்பு 77 வயது முதியவர் அவரது குடியிருப்பில் இறந்து கிடந்தார். கத்தியால் குத்தி குறித்த முதியவர் கொலைசெய்யப்பட்டிருந்தார்.
இதுதொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்
தெற்கு ஜேர்மனியின் ஃப்ரீபர்க் நகரில் நடந்த ஒரு கொலைச் சம்பவம் கடந்த வாரம் தலைப்புச் செய்தியாகியது. ஜூலை 14, 2024 ஞாயிற்றுக்கிழமை, 77 வயது முதியவர் ஒருவர் தனது வீட்டில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனையில் அவர் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை தெரியவந்தது.

ஜேர்மன் பொலிஸாரின் கூற்றுப்படி, குற்றவாளி அன்றைய தினம் இரவு வீட்டிற்குள் நுழைந்து மதிப்புமிக்க பொருட்களைத் தேடும் போது உரிமையாளரைச் உரிமையாளரை கண்டதும் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
தடயங்கள் மற்றும் விரிவான விசாரணைகளின் அடிப்படையில், அல்ஜீரிய குடியுரிமை கொண்ட 21 வயது இளைஞருக்கு எதிராக கைது வாரண்டுக்கு அரசு வழக்கறிஞர் அலுவலகம் மாவட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பித்தது.
பின்னர் காணொளி காட்சிகள் மற்றும் சாட்சியிடமிருந்து கிடைத்த தகவல்கள் சந்தேக நபரை அடையாளம் காண வழிவகுத்தன.
சர்வதேச வேட்டையின் ஒரு பகுதியாக, அவர் இப்போது சுவிட்சர்லாந்தில் – குறிப்பாக பேர்ன் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஃப்ரீபர்க் காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோர விரும்பியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் மே 1, 2024 முதல் ஜெர்மனியில் இருந்தார் எனவும் இதற்கு முன்னர் கொள்ளைச்சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சுவிட்சர்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த நபரை நாடு கடத்தப்படுவதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்றுவருவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.





