Swiss News In Tamil

சுவிஸில் மீண்டும் புயலுடன் ஆலங்கட்டி மழை : கடும் எச்சரிக்கை.

மீண்டும் புயலுடன் ஆலங்கட்டி மழை- பேர்ணுக்கு கடும் எச்சரிக்கை.

சுவிஸில் மீண்டும் புயலுடன் ஆலங்கட்டி மழை : கடும் எச்சரிக்கை. சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் நேற்று முதல் மீண்டும் புயலுடன் கூடிய வானிலை காணப்படுகிறது.

பேர்ணில் இருந்து சூரிச் நோக்கி நகரும், புயலினால் கடும் காற்று, மழை, ஆலங்கட்டி மழை, மின்னல் , வெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேர்ண் நகருக்கு இரண்டாவது பெரிய வானிலை எச்சரிக்கையான 4 ஆவது நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுவிஸில்

நேற்று மாலை Spiez இல் புயல் வீசிய போல பல சென்டிமீற்றர்கள் விட்டமுள்ள ஆலங்கட்டி மழை கொட்டியது.

Seftigen நகர சபையில் கடும் மழையினால் வீதிகளில் வெள்ளம் காணப்படுகிறது.

புயல் மற்றும் மழையினால், Basel SBB – Strasbourg (F) இடையிலான ரயில் போக்குவரத்து நேற்றிரவு 3 மணிநேரம் தடைப்பட்டது.

முன்னெச்சரிக்கையாக ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்று அதிகாலை மீண்டும் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button