Swiss News In Tamil

லூசர்ன் நகரில் சவாலாக மாறியுள்ள பார்க்கிங் பிரச்சினை

லூசர்ன் நகரில் சவாலாக மாறியுள்ள கார் பார்க்கிங் பிரச்சினை

லூசர்ன் நகரில் சவாலாக மாறியுள்ள பார்க்கிங் பிரச்சினை லூசர்ன் நகரில் கார் பார்க்கிங் பிரச்சினை படிப்படியாக மிகப்பெரிய சாவாலாக மாறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகளவான பார்க்கிங் இடங்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில் நகரத்தால் அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

லுசேர்ன் பத்திரிகையின் அறிக்கையின்படி, கார் ஓட்டுநர்கள் தங்களது கார்களை பார்க்கிங் செய்ய அதிகாரப்பூர்வமற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லூசர்ன்
லூசர்ன்

ஒரு வருடத்திற்கு முன்பு, லூசர்ன் இன்செலி பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் மூடப்பட்டது. இதற்கு பதிலாக புதிய இடங்களை உருவாக்க நகரம் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், மாற்று வழிகளுக்கு ஓட்டுனர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.

அதற்கு பதிலாக, கார் நிறுவனங்கள் ஃபிராங்கன்ஸ் திராச போன்ற ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள நிறுத்தும் இடங்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

2022 இன் இறுதியில் நகரத்தால் அறிவிக்கப்பட்ட ஆறு நிறுத்தப் பகுதிகளில், நான்கு தற்போது பயன்பாட்டில் உள்ளன.

மேலும் இரண்டு பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது . புதிய இடங்களை ஒரு முழுமையான மாற்றாகப் பார்க்கவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button