Swiss News In Tamil

Vaud கன்டோனில் சிறார்களுக்கு இன்று முதல் இ-சிகரட்டுகளுக்கு தடை

Vaud கன்டோனில் சிறார்களுக்கு இன்று முதல் இ-சிகரட்டுகளுக்கு தடை

Vaud கன்டோனில் சிறார்களுக்கு இன்று முதல் இ-சிகரட்டுகளுக்கு தடை வாட் கன்டோனில் சில்லறை விற்பனையாளர்கள் இனி சிறார்களுக்கு இ-சிகரெட்டுகளை விற்க இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது தொடர்பாக பிரேரனை முன்வைக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இது நடைமுறைக்கு வந்துள்ளது.

Vaud

இன்று முதல், ‘சூடாக்கப்பட்ட புகையிலை, எலக்ட்ரானிக் சிகரெட்கள், பஃப்ஸ் மற்றும் பிற தொடர்புடைய பொருட்கள் உட்பட அனைத்து புகையிலை பொருட்களும் விற்பனை செய்யவோ அல்லது சிறார்களுக்கு வழங்கவோ முடியாது’ என்று கன்டோனல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

RELETED NEWS :_ இ-சிகரெட் பயன்படுத்த வாட் மாகாணத்தில் தடை விதிப்பு

இந்த நடவடிக்கையின் மூலம், அத்தகைய நடவடிக்கையை அறிமுகப்படுத்திய கடைசி பிரெஞ்சு மொழி பேசும் பகுதியாக கன்டோன் வாட் திகழ்கின்றது.

இ-சிகரட்டுகள் மீதான தடை வழக்கமான சிகரெட்டுகள் மற்றும் புகையிலை போன்ற அதே சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button