Swiss News In Tamil

சிறுவர் துஷ்பிரயோகம் : சூரிச் போலீசாரிடம் சிக்கிய நபர்

சிறுவர் துஷ்பிரயோகம் மேற்கொண்டவரை நூதன முறையில் மடக்கிய போலீசார்

சிறுவர் துஷ்பிரயோகம் மேற்கொண்டவரை நூதன முறையில் மடக்கிய போலீசார்!! கிராபண்டன் மாகாணத்தில் உள்ள பொலிசார், சிறுவர் துஷ்பிரயோகம் செய்பவரைக் கைது செய்ய நூதன முறையை வழிவகுத்த ஒரு நடவடிக்கையின் விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளனர்.

32 வயது நபர் ஒருவர் 13 வயது சிறுமி என்று நினைத்து அவளை தனது வலையில் வீழ்த்தி சந்திக்க ஏற்பாடு செய்தார்.

ஆனால் அவர் 13 வயது சிறுமி என நினைத்து உண்மையில் சூரிச்சில் ஒரு போலீஸ் அதிகாரியுடன் பேசிக் கொண்டிருந்தார்.

சிறுவர் துஷ்பிரயோகம்

அவளைச் சந்திப்பதற்காக அந்த மனிதன் சூரிச்சிலிருந்து கிராபண்டனுக்குப் பயணம் செய்தான். இது பாலியல் உறவுக்காக மேற்கொண்ட சந்திப்பு என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

சந்திப்பு இடம்பெற்ற இடத்தில் 32 வயதான அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button