Swiss News In Tamil

கிறிஸ்துமஸ் மரம் தீப்பிடித்து எரிந்ததில் இருவர் காயம்

வீடு ஒன்றில் இருந்த கிறிஸ்மஸ் மரம் தீப்பிடித்தமையினால் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இருபத்தி மூன்றாம் திகதி சனிக்கிழமை சென்காலன் கன்டோனில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் சென்ட்காலன் கன்டோனிலுள்ள பல்கேஐ; நகரிலுள்ள வீடு ஒன்றில் இரவு ஒன்பது முப்பது மணியளவில் தீபற்றியுள்ளது. தீ பரவலை தொடர்ந்து வீட்டில் இருந்த இருவரால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் மரம் தீப்பிடித்து எரிந்ததில் இருவர் காயம்

எனினும் இச்சம்பவத்தில் தீயை அணைக்க முற்பட்ட 59 வயதான இரு குடியிருப்பாளர்களும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கிறிஸ்மஸ் மரத்தின் கீழ் எரிந்த மெழுகுதிரி மூலமே தீ பற்றியிருக்க கூடம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்கள் ரேகா மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button