Swiss News In Tamil
சூரிச் Hinwil பகுதியில் தாக்குதல் : ஒருவர் படுகாயம்.!!
சூரிச் கன்டோன் ஹின்வில் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நபர்களுக்கிடையிலால மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து அவசர அம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

குறித்த மோதல் சம்பவம் தொழில்துறை மையம் ஒன்றில் அதிகாலை மூன்றுமணியளவில் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் தப்பியோடியுள்ளதாகவும் போலீசார் சாட்சியங்களை தேடிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





