Swiss News In Tamil

சூரிச் விமானநிலையத்தில் சடுதியாக குறைந்த பயணிகள் எண்ணிக்கை.!!

சுவிட்சர்லாந்தின் சூரிச் விமானநிலையத்தில் திடீரென பயணிகள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளியன்று தொன்னூறாயிரத்துக்கும் குறைவான பயணிகளே சூரிச் விமான நிலையம் வழியாக சென்றதாக சூரிச் விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் பிரபல செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

விமான நிலையம் சரியான புள்ளிவிவரத்தை கொடுக்கவில்லை என்றாலும், 2009 ஆண்டில் 80,000 பயணிகள் சூரிச்சிற்கு உள்ளேயும் வெளியேயும் பறந்துள்ளனர்.

எனினும் அந்த ஆண்டை விட இது அதிகமாக இருப்பதாக அவர்கள் உறுதிப்படுத்தினர். கிறிஸ்மஸ் காலத்தில் விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், டிசம்பர் 22 மற்றும் 23 ஆகியவை உச்ச நாட்களாகக் கருதப்படுகின்றன.

airport 335556 1280

சூரிச் விமான நிலையம் 2020 ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் நிலமைகள் காரணமாக பயணிகளின் எண்ணிக்கையில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

அப்போது, கிறிஸ்துமஸ்க்கு முந்தைய நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை சுமார் பதினேழாயிரமாக குறைந்தது. ஒரு வருடம் கழித்து, அது முப்பத்தினான்காயிரமாக இரட்டிப்பாகியது.

ஓராண்டுக்கு முன்பு, டிசம்பர் 23 முதல் ஜனவரி 2 வரையிலான விடுமுறை நாட்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு பயணித்தவர்களின் எண்ணிக்கை அறுபத்தைந்தாயிரமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button