Swiss News In Tamil

லுசேர்னில் வெடிவைத்து தகர்க்கப்பட்ட ஏ.டி.எம் இயந்திரம்.!!

லுசேர்னில் வெடிவைத்து தகர்க்கப்பட்ட ஏ.டி.எம் இயந்திரம்.!! இன்று திங்கள்கிழமை அதிகாலை லூசேர்ன் நகரில் உள்ள ஏ டி எம் இயந்திரம் ஒன்று வெடிவைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள் வெடிவைத்து தகர்த்து விட்டு தப்பிச்சென்றுள்ளதாக காவல்துறையில் ஊடகப்பேச்சாளர் யானிக் ப்ரோப்ஸ்ட் தெரிவித்தார்.

3585718762562694

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார். ஏடிஎம் இருந்த கட்டிடத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்த 10 பேரை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றியதாக குறிப்பிட்டனர்.

குறித்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் மேலதிக தகவல்கள் எதனையும் வழங்கவில்லை. விசாரணை இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Source:- Luzern Polizei

Related Articles

Back to top button