Swiss News In Tamil

லூசர்ன் மாகாணத்தில் மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய பேரூந்து ஓட்டுனர்

லூசர்ன் மாகாணத்தில், இரவு போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த இரவுப் பேருந்தின் ஓட்டுநர் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தினார்.

அவர் வெளியேறும் வழியைத் தவறவிட்டதால், பேருந்தைத் திருப்ப முயற்சி செய்து விபத்தில் சிக்கிக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. எனினும் இவ்விபத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

263454
 (c) KeyStone

ஆனால் சுமார் 10,000 பிராங்குகளின் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுனரிடம் மேற்கொண்ட ஆல்ககோல் சோதனையில் ஓட்டுநர் மது பாவித்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் உரிமத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சாலைப் போக்குவரத்து அலுவலகம் முடிவெடுக்கும் வரை குறித்த ஓட்டுனர் இனி மோட்டார் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button