Swiss News In Tamil

வின்டர்தூரில் ரயில் தண்டவாளத்தில் அநாதரவாக நின்ற 3 வயது குழந்தை.!!

வின்டர்தூரில் ரயில் தண்டவாளத்தில் அநாதரவாக நின்ற 3 வயது குழந்தை.!! வெள்ளிக்கிழமை மதியம் Oberwinterthur இல் உள்ள ரயில் பாதையில் இருந்து 35 வயதுடைய பெண், அநாதரவாக நின்றுகொண்டிருந்த 3 வயது குழந்தையை காப்பாற்றியுள்ளார்.

குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 4:30 அளவில் இடம்பெற்றுள்ளது. ரயில் பாதையில் நின்றுகொண்டிருந்த குழந்தையை அழைத்து சென்று குறித்த பெண் போலீசாரிடம் முறையிட்டுள்ளார்.

குழந்தை யார் எனத்தெரியாது எனவும், நீண்ட நேரமாக ரயில் பாதையில் நின்றுகொண்டிருந்தது எனவும் அவர் போலீசாரிவின்டர்தூரில் டம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகள் பலனளிக்காததை அடுத்து, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் குழந்தையை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

கடைசியில் குழந்தையின் தந்தை தன் மகனைத் தேடி காவல் நிலையம் வந்ததாக சொல்லப்படுகிறது. தாய் ஒரு உடன்பிறந்த சகோதரனைப் பார்த்துக் கொண்டிருந்த போது குழந்தை கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியதாக அவர் போலீசாரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குழந்தையை காப்பாற்றிய பெண்ணுக்கு போலீசார் தமது நன்றிகளை தெரிவித்தார்கள்.

Related Articles

Back to top button